குஜராத் தேர்தலுக்கு முன்னர் ராகுலுக்குப் பதவி? | will rahul gandhi be appointed as the new leader of the party

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (31/10/2017)

கடைசி தொடர்பு:12:40 (31/10/2017)

குஜராத் தேர்தலுக்கு முன்னர் ராகுலுக்குப் பதவி?

'குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட வேண்டும்' என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி

ஒரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அந்த மாநிலம் குஜராத். ஆளும் பி.ஜே.பி, ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல் போன்ற வலிமையான தலைவர் வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட, பெரிதாகப் பொதுக்குழுக் கூட்டம் கூடவேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் தலைவரை அதிகாரபூர்வமாக அறிவிக்க சோனியாவுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.