வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (01/11/2017)

கடைசி தொடர்பு:14:40 (01/11/2017)

குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கலாம்..! தேர்தல் ஆணையம் பரிந்துரை

'குற்றப் பின்னணி உடைய நபர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம்' என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


'குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்' என்று பா.ஜ.க-வின் அஸ்வினி உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் இன்று உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்தது. குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கலாம். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்கியுள்ளோம். குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தால்தான், அரசியலிலிருந்து குற்றச்செயல்களைக் குறைக்க முடியும்' என்று விளக்கமளித்தது.