வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (01/11/2017)

கடைசி தொடர்பு:15:40 (01/11/2017)

’விவசாயிகளைப் புறக்கணித்தது மோடி அரசு’: குஜராத்தில் ராகுல் தாக்கு!

’மோடி அரசு விவசாயிகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது’ என குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கிப் பேசினார்.

ராகுல்

ஒரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத் தேர்தல்போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அது குஜராத். ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாக பி.ஜே.பி பரிந்துரைக்கும் மாநிலம். 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து, ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன.

இந்தச் சூழலில், குஜராத்தில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு நடந்த பிரசாரம் ஒன்றில், “குஜராத் என்பது வளர்ச்சியின் மாதிரி என மோடி கூறுகிறார். அந்த மாதிரி தோல்வியில் முடிந்துவிட்டது. மோடி அரசு விவசாயிகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது. ஏழைகளுக்கும் இந்த மோடி அரசு ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகள், தங்கள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமெனத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார்கள். ஆனால், அவர்களை இந்த அரசு ஏமாற்றிவிட்டது. வரும் தேர்தலில் குஜராத் மக்கள் மோடி அரசுக்குத் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்” என ஆவேசமாகப் பேசினார்.