வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (02/11/2017)

கடைசி தொடர்பு:08:29 (02/11/2017)

ரயில்வே நிலையத்தை சோதனை செய்த ஹேமமாலினிக்கு அதிர்ச்சி கொடுத்த காளை..!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் பா.ஜ.க எம்.பி ஹேமமாலினி சோதனை செய்யும்போது திடீரென மாடு குறுக்கே ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. 


மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தின் நடை மேம்பாலம் கடந்த மாதம் இடிந்து விழுந்ததில் 23 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அனைத்து எம்.பி-க்களும் தங்களது தொகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களை ஆய்வுசெய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்தநிலையில், நேற்று பா.ஜ.க எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினி அவருடைய தொகுதியான மதுரா ரயில் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீரென்று ரயில் நிலையத்துக்குள் மாடு ஒன்று புகுந்தது. பதறி ஓடிய மாடு, ஹேமமாலினியின் அருகே, அவரைக் கடந்து சென்றது. அதையடுத்து, ஹேமமாலினி ரயில்வே அதிகாரிகளை கண்டித்துவிட்டுச் சென்றார்.