வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (02/11/2017)

கடைசி தொடர்பு:16:05 (02/11/2017)

உத்தரப்பிரதேச அனல்மின் நிலைய விபத்து..! ராகுல்காந்தி நேரில் சென்று ஆய்வு

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள என்.டி.பி.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொந்தத் தொகுதி ஆகும். வெடி விபத்துகுறித்து தகவல் கிடைத்ததும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ரேபரேலிக்கு விரைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறவர்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். வெடி விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் பிரதமரின் நிவாரணத்தொகையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பிரதீப்