வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (02/11/2017)

கடைசி தொடர்பு:21:35 (02/11/2017)

கேரள முதல்வருடன் சச்சின் சந்திப்பு

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினார்.

சச்சின் பினராயி

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி வரும் 17-ம் தேதி தொடங்கி அடுத்த 5 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. முதல் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறயுள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சின் ஐ.எஸ்.எல் அணிகளில் ஒன்றான கேரள பிளாஸ்டர்ஸின்  உரிமையாளர்கள் ஒருவர் ஆவார். சச்சின் இன்று தன் மனைவி அஞ்சலியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். கேரள  அரசு தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

சந்திப்பின்போது சச்சின், கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்கு பினராயி விஜயன் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கொச்சியில் 17-ம் தேதி நடைபெறவிருக்கும் முதல் போட்டிக்கு வருகை தர வேண்டும் என்றும் சச்சின் அழைப்பு விடுத்தார்.

சச்சின் உடனான சந்திப்புக்குப் பிறகு, அது சம்பந்தமான புகைப்படங்களை பினராயி விஜயன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

- பிரதீப்