வெற்றிகரமாக நிறைவடைந்த கால்பந்து உலகக்கோப்பை: மம்தாவுக்குப் பாராட்டு

பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்ததற்காக உலகக் கால்பந்து சம்மேளனம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

மம்தா

கோப்புப்படம்

பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான U-17 உலகக் கால்பந்து தொடர் முதன்முதலாக இந்தியாவில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் முதல் ஃபிஃபா தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு உலகக்கோப்பைத் தொடரை மேற்குவங்க மாநிலம் ஒருங்கிணைத்தது. ஒருங்கிணைப்பில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றிகரமாகத் தொடரை நிறைவு செய்து தந்த மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உலகக் கால்பந்து சம்மேளனம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. முன்னதாகவே இத்தகைய பெரிய வாய்ப்பளித்த உலகக் கால்பந்து சம்மேளனத்துக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவிப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!