சுவிஸ் தம்பதியைத் தொடர்ந்து ஜெர்மன் சுற்றுலாப் பயணி மீதும் தாக்குதல்! - விமர்சனத்துக்குள்ளாகும் ஆதித்யநாத் அரசு

உத்தரப்பிரதேச மாநிலம், சொன்பத்ரா ரயில் நிலையத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

up
 

உ.பிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த அக்டோபர் 22-ம் தேதி ஆக்ரா அருகில் உள்ள பதேபூர் சிக்ரி என்ற பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாத் தம்பதி மீது உள்ளூர் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. அதில் படுகாயம் அடைந்த தம்பதி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்தச் சம்பவம் தேசியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம்குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரப்பிரதேச மாநில அரசிடம் அறிக்கை கேட்டார். ’சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்தார். ஸ்விஸ் தம்பதி தாக்கப்பட்டது தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தற்போது மீண்டும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை சொன்பத்ரா ரயில் நிலையத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்  தொடர்பாக உ.பி போலீஸ் ஒருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் தொடர் தாக்குதல் சம்பவங்களால் யோகி ஆதித்யநாத் அரசுமீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!