கோதாவரி ஒப்பந்தம்: ஆந்திரா- தெலுங்கானா இடையே கையெழுத்தானது | andhra and telangana made a pact to share Godavari River

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (05/11/2017)

கடைசி தொடர்பு:10:44 (06/11/2017)

கோதாவரி ஒப்பந்தம்: ஆந்திரா- தெலுங்கானா இடையே கையெழுத்தானது

கோதாவரி நதி நீரை பகிர்ந்துகொள்வதற்காக ஆந்திரா, தெலுங்கானா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கோதாவரி

தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரம் போல ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிரா இடையே நீண்ட நாளாக இருந்து வரும் பிரச்னை கிருஷ்ணா- கோதாவரி நதிநீர் பங்கீடு. ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிந்த பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு வெறும் உபரி நீர் மட்டுமே கிடைத்துவந்தது. இதையடுத்து, ஆந்திரா- தெலுங்கானா இடையே ஒரு பரஸ்பரம் ஏற்பட நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களும் இணைந்து ‘கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை’ வாரியம் அமைத்தனர். இந்த மேலாண்மை வாரியத்தின் மூலம் இதுவரையில் பலமுறை நதிநீர் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், நேற்று கூடிய மற்றொரு பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பட்டிசீமா நிபுணர் குழுவின் சிபாரிசு மூலம் கோதாவரி நதி நீரை பகிர்ந்துகொள்வதற்காக ஆந்திரா, தெலுங்கானா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்  ஸ்ரீசைலம், நாகார்ஜுனா அணைகளில் தேங்கும் 330 டி.எம்.சி. தண்ணீரில் ஆந்திராவுக்கு 217.8 டி.எம்.சி. தண்ணீரும், தெலுங்கானாவுக்கு 112.2 டி.எம்.சி. தண்ணீரும் கிடைக்கும்.