தொடரும் கோரக்பூர் மருத்துவமனை மரணங்கள்... 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி

உத்தரப்பிரதேச மாநிலம்  கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் (பி.ஆர்.டி) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரு தினங்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோரக்பூர் குழந்தைகள்


குழந்தைகள் பலியான தகவலை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீவத்ஸவா ஊடகங்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார். மூளை அழற்சி மற்றும் தொற்றுநோய் காரணமாகக் குழந்தைகள் பலியானதாகவும் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார். பிறந்து ஒரு மாதம்கூட ஆகாத 15 குழந்தைகளும் பிறந்து ஓரிரு மாதங்களான 15 குழந்தைகளும் உயிர் இழந்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் இதே மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஆறுநாளில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேசத்தில் மருத்துவத் தரம்குறித்த விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், மீண்டும் 30 குழந்தைகளின் மரணம் நிகழ்ந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!