கச்சா எண்ணெய் விலை உயர்வு! - வீழ்ச்சியில் இந்தியப் பங்குச்சந்தை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து, இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய்

உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர்ப் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தும் இன்றைய இந்தியப் பங்குச்சந்தையின் வீழ்ச்சிப் பாதைக்குக் காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 160.93 புள்ளிகள் வீழ்ந்து 33,570 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 44.50 புள்ளிகள் சரிந்து 10,407 புள்ளிகளாக உள்ளது.

இந்தியப் பங்குச்சந்தை வீழ்ந்தாலும், தொடர்ந்து 32,000 புள்ளிகள் அருகிலேயே நிலைத்திருப்பது வணிகர்களை மகிழ்ச்சியிலேயே வைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஐ.டி நிறுவனங்களின் பங்குகள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை நிறுவனப் பங்குகள் உச்சத்தில் உள்ளன. விமானப் போக்குவரத்துத்துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம், சர்வதேச சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியபோதும், இந்தியப் பொருளாதாரத்தில் அதனால் பெரும் வளர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. இந்தியா, எண்ணெய் வளங்களைப் பொறுத்த வரை அதிகமாக இறக்குமதியையே நம்பி இருப்பதால், கச்சா எண்னெய் விலை ஏற்றம் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!