பாலியல் வன்கொடுமைகுறித்துப் புகாரளிக்க #SheBox: மேனகா காந்தியின் புதிய முயற்சி!

'பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் பெண்கள், #SheBox இணைய முகவரிமூலம் புகாரளிக்கலாம்' என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார்.

மேனகா காந்தி

பெண்கள், பாலியல் துன்புறுத்தல்குறித்துப் புகார் அளிப்பதற்காக, 'ஷி பாக்ஸ் (SHE-box' - Sexual Harassment Electronic Box) http://www.wcd-sh.nic.in என்ற இணையதளத்தை, மத்திய அமைச்சர் மேனகா காந்தி சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம்செய்தார். இந்திய அளவில் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துவருவதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. இதற்குத் தீர்வு காணும் ஒரு பகுதியாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஷி பாக்ஸில் தெரிவிக்கப்படும் புகார்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த ஆன்லைனுக்கு பெண்கள் அனுப்பும் புகார்கள், உடனடியாக உட்புறப் புகார் குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

முதலில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு என மட்டும் இந்த இணையதளப் பக்கம் தொடரப்பட்டது. தற்போது, நாட்டின் அனைத்துப் பெண்களும் இந்த இணையதளத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் புகார் அளிக்கலாம் என மேனகா காந்தி அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!