பண மதிப்பிழப்பை செயல்படுத்தி ஓராண்டு: சத்தீஸ்கரில் காங்கிரஸின் `கறுப்பு தின மாரத்தான்'!

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கைகையை அமல்படுத்தியது. இன்றுடன் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு முடிவடைவதையொட்டி, எதிர்க்கட்சிகள் இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரித்துவருகின்றனர். சத்தீஸ்கரில், காங்கிரஸ் சார்பில் `கறுப்பு தின மாரத்தான்' நடத்தப்பட்டது.

கறுப்பு தின மாரத்தான்

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பண மதிப்பிழப்பு இருக்கும் என்று கூறிய மத்திய அரசு, புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதற்குப் பதிலாக, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. புழக்கத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை விடுவதில் பல சிக்கல்கள் இருந்ததால், மக்கள் இந்நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்படனர். மேலும், ரிசர்வ் வங்கி, பண மதிப்பிழப்புசெய்த 98 சதவிகித ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டன என்று அறிக்கை வெளியிட்டது. அதனால், இந்நடவடிக்கை கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக எதிர்க்கட்சிகள் நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக அறிவித்துவந்தன. இதையொட்டியே, சத்தீஸ்கரில் இன்று, கறுப்பு தின மாரத்தானை  நடத்தியது காங்கிரஸ். இன்று, பல்வேறு இடங்களில் இதைப்போன்ற போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!