வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (09/11/2017)

கடைசி தொடர்பு:20:28 (09/11/2017)

Stubble burning-ஆல் கலங்கிய டெல்லி..! நச்சுப் புகை காட்சிகள் #VikatanPhotoStory

டெல்லிவாசிகள் ‘சின்னத்தம்பி’ கவுண்டமணியாக மாறியிருக்கும் காலம் இது. “ரெண்டு பைக் வருது. நடுவுல போயிடலாம்னு நினைச்சேன்” என குத்துமதிப்பாக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். நச்சுப்புகை மாநகரை மூடி வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் Stubble burning என்கிறார்கள்.

Stubble burning

நம்ம ஊரில் நெற்கதிரை அறுவடை செய்தபின் நிலத்தில் தங்கியிருக்கும் மிச்சங்களை எரிப்பது வழக்கம். அதேபோல, வடமாநிலங்களில் நெற்கதிர்களோடு, கோதுமைக் கதிர்களையும் எரிப்பார்கள். அதைத்தான் Stubble burning என்கிறார்கள்.

டெல்லி

வழக்கமாகவே, இது டெல்லிக்கு பிரச்னைதான். இப்படி எரிப்பதை நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் பலமுறை எச்சரிக்கை விட்டிருக்கின்றன. ஆனால், அருகிலிருக்கும் கிராமவாசிகள் கேட்பதாயில்லை.

டெல்லி

நாசா வெளியிட்டிருக்கும் சாட்டிலைட் படங்களும் இதையே சொல்கின்றன. நாசாவின் படங்கள் தரும் தகவலின்படி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில கிராமங்கள்தான் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணங்கள்.

நாசா

பஞ்சாப் மாநிலத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும் 7 முதல் 8 மில்லியன் டன் நெல் அறுவடை செய்யப்படுகிறது. அந்த மிச்சங்களை இந்த மாதத்தில்தான் எரிக்கிறார்கள்.

டெல்லி

சென்ற ஆண்டு ஹரியானா மாநில அரசு, கதிர்களை எரித்த 1406 பேர் மீது வழக்குத் தொடுத்து 13.75 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தது.

டெல்லி

மற்ற நகரங்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், டெல்லியில் ஏற்கெனவே வாகனப் புகை அதிகமாக இருப்பதால், இதுவும் சேர்ந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

டெல்லி

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இதை “Environmental Emergency" என்கிறார். உடனடித் தீர்வுகளை மட்டும் யோசிக்காமல், நீண்டகாலத் தீர்வுகளை யோசித்து அரசு செயல்பட வேண்டும்.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்