Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சங்கிலியால் கட்டி தங்கையைச் சிறைவைத்த அண்ணன்கள்! தெலங்கானாவில் சோகம்

தெலுங்கானாவில் அண்ணன்கள் வீட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்ட இளம் பெண்ணை போலீஸார் மீட்டனர்.


தெலுங்கானா மாநிலம் ஜக்தியல் பகுதியில் பெண் ஒருவரை வீட்டின் முன்பு சங்கிலியால் கட்டி வைத்திருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணின் அண்ணன்கள் மற்றும் அண்ணிகளே அவரை இரும்புச் சங்கிலியில் பிணைத்து வைத்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்கு 25 வயது. இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஓராண்டுக்கு முன்பு அவருடைய தந்தை இறந்து விட்டார். ஆதரவுக்கு வேறு யாரும் இல்லாத காரணத்தால் அவர் அண்ணன்களின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதேசமயம், முரண்பட்ட வேறொரு தகவலையும் அண்டைவீட்டார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு மனநல பாதிப்பு இருப்பதாகவும், அவர் வீட்டை விட்டு வேறெங்கும் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே சங்கிலியில் கட்டி வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர். அந்தப் பெண்ணைக் குணப்படுத்த அண்ணன்கள் ரூ.11 லட்சம் வரை செலவழித்தனர். ஆனாலும் குணப்படுத்த முடியாமல் போய் விட்டது என்றும் அவர்கள் கூறினார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close