வெளியிடப்பட்ட நேரம்: 21:26 (09/11/2017)

கடைசி தொடர்பு:21:26 (09/11/2017)

"தெருத்தெருவாக அலைந்ததுதான் மிச்சம்" - டிமானிடைசேஷன் பாதிப்புகள் #VikatanSurveyResult

மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த வருடம் நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இது மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து, ஓராண்டு ஆகியுள்ள நிலையில், கறுப்புப் பணம் பற்றிய எந்தத் தகவலையும் மத்திய அரசு வெளியிடவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "  "பணமதிப்பு நடவடிக்கை ஒரு சட்டபூர்வ கொள்ளை" என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நேற்று (08.11.2017) விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

4. டிமானிடைசேஷன் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பாதிப்பை ஏற்படுத்தியதா, இல்லை லாபம் அளித்ததா? இந்த ஒரு வருட அனுபவத்தை ஓரிரு வரிகள் பதிவிடவும்...

தனிப்பட்ட முறையில் பாதிப்பு இல்லை,பெரிய லாபமும் இல்லை....ஆனால்,உறுதியாக தேச நலன் சார்ந்த நடவடிக்கைதான்.  

ஆம். என்னுடைய தங்கையின் திருமணம் மற்றும் புது வீடு கட்டும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது.

Yes, I was affected  because, I was waiting at bank long time, l loss my duty and salary, people totally affected thisproblem

பாதிப்புதான், நிறைய சிறு தொழில் செய்பவர்கள் நலிவுற்றதால், சில பொருள்களை அல்லது வேலை நடைபெற அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது.

Not make any impact....only struggled for cash for 2days..

சாமனிய மக்களை நடு ரோட்டில் நிற்க வைத்து கார்ப்பரேட் முதலாளிகளை வாழ வைத்தது மோடி பாஜக அரசு.

ஆயிரத்த ஒழிச்சிட்டு 2000ஆயிரத்த கொண்டுவந்து கட்டாய பேங்கிங் மூலமாக செலவு அதிகமாக ஆயிருக்கு...வரவு குறைஞ்சிருச்சு....

கடன்வாங்கி கடந்த ஆறு வருடங்கள் நான் செய்துவந்த என்னுடைய கடை கடந்த ஒருவருடமாக நலிவடைந்து கொண்டே இருக்கிறது கடையைத் தொடர்ந்து நடத்தமுடியாமல் இக்கட்டில் தவிக்கிறேன் ஏனெனில் பணமதிப்பிழப்பு மற்றும்GST யால் நேரடியாக பாதிக்கப்பட்டேன்...

பல வருடங்களாகவே Digital transaction பழகியிருந்ததால் பாதிப்பு ஏதும் இல்லை

கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாகப் பார்த்தேன். அதில் சிறிது அளவு கூட ஒழிக்க முடியவில்லை.

பணத்திற்காக தெரு தெருவாக அலையவிட்டதுதான் மிச்சம்.

சில பாதிப்புகள் இருப்பினும் நாட்டின் எதிர்காலம் கருதி இந்த நடவடிக்கை தேவை என்பது என் கருத்து

இவர்கள் ஆட்சியில் இனிமேல் இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்

டிமானிடைசேஷன் எனக்கு நவம்பர்-2016 முதல் பிப்ரவரி-2017 வரை பெரிய மன உளைச்சல் தந்தது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்