வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (09/11/2017)

கடைசி தொடர்பு:20:33 (09/11/2017)

'50 நாள்', 'புதிய இந்தியா'.. பணமதிப்பிழப்புக்காக மோடி என்னவெல்லாம் சொன்னார்..?! - ஒரு டைம்லைன்! #1yearOfDemonitisation

ந்தியாவில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று அன்றைய தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார். 

மோடி

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மக்கள், முதியோர், நடுத்தரவர்க்கத்தினர் என அனைத்துத் தரப்பினரும் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2,000 மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் குவிந்தனர். அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் 100 ரூபாய் நோட்டுகள் முற்றிலுமாகத் தீர்ந்து, பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டன. கோடீஸ்வரர்களும் மோடியின் ஒரே அறிவிப்பினால் நடுத்தெருவுக்கு வந்தனர்.

ஆனால், பிரதமர் மோடியோ, "கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை. புதிய இந்தியாவை உருவாக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை" என்று அப்போது அறிவித்தார். மோடியின் இந்த நடவடிக்கையை இந்த ஓராண்டில், பல்வேறு தரப்பினரும் ஆதரித்தும், எதிராக விமர்சித்தும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 

ஆனால், பிரதமர் மோடி தன் நடவடிக்கை குறித்து என்னவெல்லாம் சொல்லி நியாயப்படுத்தினார் என்பதை விளக்கும் டைம்லைன் :

 

 
 
Picture

{{x.title}}

{{x.description}}
{{x.dateTime}}

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்