டிசம்பர் முதல் சுங்கச்சாவடியில் டிஜிட்டல் முறையில் வசூல்..! | Tollgate will collect the money through digital transaction from December

வெளியிடப்பட்ட நேரம்: 00:10 (10/11/2017)

கடைசி தொடர்பு:09:29 (10/11/2017)

டிசம்பர் முதல் சுங்கச்சாவடியில் டிஜிட்டல் முறையில் வசூல்..!

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கட்டணக்கொள்ளையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், டிசம்பர் மாதத்திலிருந்து டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

டோல்கேட், டிஜிட்டல் பணபரிவர்தனை

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 386 டோல்கேட் உள்ளன. 60 கி.மீட்டருக்கு ஒன்று என்ற விகிதத்தில் டோல்கேட்டுகள் உள்ளன. வாகனம் வாங்கும்போதும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வாங்கும்போதும் மக்கள் சாலைவரி கட்டுகிறார்கள். இந்த நிலையில், சுங்கச்சாவடி அமைத்து வரிவசூல் செய்வது பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணங்கள் நீக்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், டிஜிட்டல் முறையில் டோல்கேட்டுகளில் வரிவசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “அரசு மற்றும் தனியார் துறைகளில் ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போது ஊழல் முறைகேடுகள் ஒழிக்கப்படும். அதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இதனால் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து டோல்கேட்களிலும் வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும். தினமும் 10 கோடிவரை அரசுக்கு வருமானம் கிடைக்கும். இது, அடுத்த ஆண்டு 30 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close