Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜோதிடர்களின் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை! தேர்தல் கமிஷன் அதிரடி!

தேர்தல் காலங்களில் தேர்தல் தொடர்பாக ஜோதிடர்கள் தெரிவிக்கும் எந்த முடிவுகளையும் வெளியிடக் கூடாது எனத் தேர்தல் கமிஷன் தடைவிதித்திருக்கிறது.

ஜோதிடர்கள், தேர்தல் கமிஷன்

இன்று இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதுபோல் குஜராத் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும். அதுவரை எந்தக் கருத்துக் கணிப்பையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனத் தேர்தல் கமிஷன் தடைவிதித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போதும் இதுபோல் தேர்தல் கமிஷன் தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜோதிடர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இன்று தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தேர்தல் முடிவு தொடர்பான எந்த ஜோதிடர்களின் கருத்துகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது. தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் என அனைத்துவகையான செய்தி ஊடகங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். இன்றிலிருந்து டிசம்பர் 14-ம் தேதிவரை இந்தத் தடை நீடிக்கும். சுதந்திரமாக தேர்தல் நடக்க ஊடகங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement