வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (10/11/2017)

கடைசி தொடர்பு:09:20 (10/11/2017)

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு: மோடியின் மொபைல் ஆப் தகவல்

பிரதமர் மோடியின் மொபைல் ஆப் மூலம் நடத்தப்பட்டக் கருத்துக்கணிப்பில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த வருடம் நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இது மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து, ஓராண்டு ஆகியுள்ள நிலையில், கறுப்புப் பணம் பற்றிய எந்தத் தகவலையும் மத்திய அரசு வெளியிடவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "  "பணமதிப்பு நடவடிக்கை ஒரு சட்டபூர்வ கொள்ளை" என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக நேற்று பிரதமர் மோடியின் மொபைல் ஆப் மூலம் ஒரு சர்வே நடத்தப்பட்டது.

அந்த சர்வேயில் 50 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தக் கருத்துக்கணிப்பில் 81 சதவிகிதம் பேர் பணமதிப்பு நிக்க நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்திருந்தனர். மேலும் 93 சதவிகிதம் பேர் ஊழலையும், கறுப்பு பணத்தையும் ஒழிக்க பணமதிப்பு நீக்கம் சரியான நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தனர்.