வரி குறைக்கப்பட்ட 177 பொருள்கள்! #GSTCouncil | GST Council Decides to reduce 177 Items rate

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (10/11/2017)

கடைசி தொடர்பு:16:59 (10/11/2017)

வரி குறைக்கப்பட்ட 177 பொருள்கள்! #GSTCouncil

177-க்கும் மேற்பட்ட பொருள்களின் வரியைக்குறைக்க  ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

gst council


ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 22 வது கூட்டம் அஸ்ஸாம் தலைநகர் கௌகாத்தியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகளின் பிரதிகளும் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

gst council
 

ஜி.எஸ்.டி. வரிவிகிதங்களை குறைப்பதோடு வரி செலுத்தும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்துக்கு முன்பு கோரிக்கைகள் எழுந்தன. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. ஆலோசனைகளுக்குப் பின்னர் 117 பொருள்களின் வரியைக் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் 28 சதவிகித வரி வரம்புக்குள் வரும் பொருள்களின் எண்ணிக்கையை 50 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 28 சதவிகித வரி வரம்பில் உள்ள 228 பொருள்களின் வரியைக்குறைப்பது தொடர்பாக இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது. அதில் 155 பொருள்களின் வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைப்பது எனப் பரிந்துரை வழங்கப்பட்டது.  சாக்லேட்,  அழகு சாதனப் பொருள்கள், ஷேவிங் க்ரீம்கள், ஷாம்பு, டியோட்ரண்டுகள், சலவை சோப்பு, கிரானைட் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி 28%-லிருந்து 18% ஆக பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. சிறுவணிகர்கள் உச்சவரம்பை ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 
குறிப்பிட்ட சில பொருள்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்ட விவரம்:

விவசாயப் பொருள்களுக்கான உதிரிபாகங்களுக்கான வரி 28 %-லிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

மிகமுக்கியமாக, ஜவுளி மற்றும் ஜவுளிப் பொருள்களுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

செங்கல் தொடர்பான வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஜவுளிப்பொருள்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று குஜராத் வணிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்காக போராட்டமும் நடத்தினார்கள். அடுத்த மாதம் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது கவனித்தக்கது.

வரிகுறைக்கப்பட்ட பொருள்களின் விவரம் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.