வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (10/11/2017)

கடைசி தொடர்பு:16:50 (10/11/2017)

உச்சம் பெறும் இந்திய மருந்து வர்த்தகம்!

கடந்த ஒரு வாரமாக வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தை, இன்று ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

மருந்து

உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தாலும் வீழ்ந்துகிடந்த இந்தியப் பங்குச்சந்தை, இன்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 117.12 புள்ளிகள் உயர்ந்து 33,368 புள்ளிகளாக உள்ளது. அதே வேளை, தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 33.95 புள்ளிகள் உயர்ந்து 10,342 புள்ளிகளாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டிய துறையாக, மருந்து வணிகம் உள்ளது. தமிழகத்தில், ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. ஆனால், தற்போது தேசியப் பங்குச்சந்தையில் அதிக லாபம் பெற்ற பட்டியலில் இந்தியாவின் மருந்து வணிகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.