வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (10/11/2017)

கடைசி தொடர்பு:18:00 (10/11/2017)

மம்தா பானர்ஜியுடன் நடிகர் கமல் சந்திப்பு!

நடிகர் கமல்ஹாசன், இன்று மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.

நடிகர் கமல் மம்தா


நடிகர் கமல்ஹாசன், சமீபகாலமாக அரசியல் சம்பந்தமான கருத்துகளை வெளியிட்டுவருகிறார். சமூகப் பிரச்னைகள்குறித்தும் கருத்துச் சொல்லிவருகிறார். அவர், அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி, விரைவில் நேரடி அரசியலுக்கு வருவார் என்ற கருத்து நிலவிவருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடந்த ரசிகர்களுடனான சந்திப்பில், 'அரசியல் கட்சி தொடங்குவது உறுதி' என்று கமல்ஹாசன் பேசியிருந்தார்.
இன்னொரு புறம், மாநில முதல்வர்களைச் அவர் சந்தித்துவருகிறார். முதலில், கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்துப் பேசினார். அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனின் இல்லத்திற்கு வந்து சந்தித்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தார். அப்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. அதன்படி இன்று மாலை கமல்ஹாசன், மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். இருவரும் தமிழகம் மற்றும் இந்திய அரசியல் நிலவரம் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.