Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஜவுளிக்கான ஜி.எஸ்.டி குறைப்பு, குஜராத் தேர்தலுக்கான சலுகையா?’ - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!

 

Arun Jaitley

Chennai: 

குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சமயத்தில் ஜவுளிக்கான ஜி.எஸ்.டி வரியை ஐந்து சதவிகிதமாக மத்திய அரசு குறைத்திருப்பது, குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அம்மாநிலத்தில் ஆளும் பி.ஜே.பி-க்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், ஜூலை 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பால், சூரத் உள்ளிட்ட குஜராத்தின் பல்வேறு நகரங்களிலும் ஜவுளித் தொழில் பாதிப்படைந்துள்ளதாக அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், சூயிங்கம் முதல் டிடர்ஜென்ட் உள்படி பல்வேறு பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவித்துள்ளது. 

கவுஹாத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 227 பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவிகித வரியானது, தற்போது 50 பொருள்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும், இதர பொருள்களுக்கான ஜி.எஸ்.டி 18 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்றைய கூட்டத்தில் மட்டும் 177 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்களுக்கான வரி தற்போதுள்ள 18 சதவிகிதத்தில் இருந்து ஐந்து சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜவுளிக்கு பெயர்போன குஜராத் மாநிலம் சூரத்தில், ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபோது, மிகப் பெரிய அளவில் ஜவுளி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த மாநிலத்தில், அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில் கொண்டே, ஜவுளி மற்றும் பல்வேறு பொருள்களுக்கான வரி குறைக்கப்பப்பட்டிருப்பதாக பரவலான கருத்துகள் எழுந்துள்ளன. மேலும், குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெறக்கூடிய தருணத்தில், ஜவுளிக்கான ஜி.எஸ்.டி-யை ஐந்து சதவிகிதமாகக் குறைத்திருப்பது சரியா? இது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்கீழ் வராதா? என்பது பற்றி முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமியிடம் பேசினோம்.

"ஜவுளித் தொழில் குஜராத்தில் மாத்திரம்தான் இருக்கிறதா.. எல்லா மாநிலங்களிலும் ஜவுளித் துறை உள்ளது இல்லையா... எனவே, குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி, நடத்தை விதிமுறைகள் தொடர்பாக, இந்தப் பதிலையே தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு தெரிவிக்கும். தேர்தல் ஆணையம் இதுபோன்ற சூழ்நிலையில், நிறைய தடவை ஒப்புக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு என்றில்லாமல், பொதுவாக எந்தவொரு அரசின் கொள்கை முடிவானாலும் ஒட்டுமொத்த நாட்டிற்குமாக அது இருக்கும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அது பாதிக்காது. இந்தியா முழுவதற்குமான பாலிசி என்ற கணக்கிலேயே இந்த ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு எடுத்துக் கொள்ளப்படும்" என்றார்.

ஒரு மாநிலத்தின் தேர்தல் நடைபெறும் போது, அந்த மாநிலத்தில் மட்டுமே அரசு நிகழ்ச்சிகளையோ, அல்லது அந்த மாநிலத்திற்கான சலுகைத் திட்டங்களையோ அறிவித்து, மக்களை ஒரு கட்சியின் பக்கம் வாக்களிக்கச் செய்வதற்கு ஈர்க்கக்கூடாது என்பதே நடத்தை விதிமுறை.

ஏற்கெனவே, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதியை அறிவிக்காமல், பிரதமரின் நிகழ்ச்சிகளுக்காக சட்டசபைத் தேர்தல் தேதியை வேறொரு நாளில் அறிவித்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்ட எழுந்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி வரியைக் குறைத்திருப்பதன் மூலம் குஜராத் தேர்தலைக் காரணம்காட்டியே அந்த முடிவை அறிவித்திருப்பதாக மத்திய அரசின் மீது மீண்டும் ஒரு சர்ச்சை எழுவதைத் தவிர்க்க முடியாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close