வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (10/11/2017)

கடைசி தொடர்பு:21:01 (10/11/2017)

யோகா கற்றுக்கொடுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பத்வா!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் யோகா கற்றுக்கொடுத்த முஸ்லிம் பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தலைவர்கள் பத்வா வழங்கியுள்ளனர்.

முஸ்லிம் பெண்

ராஞ்சி அருகே உள்ள துரந்தா பகுதியில் வசித்து வரும் ராபியா நாஸ் என்பவருக்கு முஸ்லிம் மதகுருக்கள் பத்வா எனும் தடையை விதித்துள்ளனர். அவர், யோகா கற்றுக்கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஞ்சியில் நடந்த யோகா  நிகழ்ச்சி ஒன்றில், யோகா குரு பாபா ராம்தேவுடன் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து, அவருக்கு முஸ்லிம் மதத்தலைவர்கள் பத்வா அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய ரபியா நாஸ், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக அவர், காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராபியா நாஸுக்கு யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். “யோகாவுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈராக், ஈரான், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஏராளமான முஸ்லிம்கள் யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். யோகா, மனதிற்கும் உடலுக்கும் பயன்விளைவிப்பதாகும்' என்று ராம்தேவ் கூறியுள்ளார்.