வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/11/2017)

கடைசி தொடர்பு:23:30 (10/11/2017)

குல்பூஷன் ஜாதவைச் சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி அளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க, அவருடைய மனைவிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

குல்பூஷண் ஜாதவ்


பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் குல்பூஷன் ஜாதவைக் கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி, பாகிஸ்தான் படைகள் கைதுசெய்தன. பலுசிஸ்தான் பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. சர்வதேச நீதிமன்றம், தூக்குத்தண்டனையை நிறுத்திவைத்துள்ளது. 
குல்பூஷன் ஜாதவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் தரப்பில் பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று, ஜாதவைச் சந்திக்க அவருடைய மனைவிக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதை, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.