வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (11/11/2017)

கடைசி தொடர்பு:18:55 (11/11/2017)

`குஜராத்துக்கு காங்கிரஸ் ஒன்றுமே செய்ததில்லை' - சீறும் நிர்மலா சீதாராமன்

குஜராத்தில், சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 9-ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தின் இரண்டு பிரதான கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், மத்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ` குஜராத்துக்காக காங்கிரஸ் ஒன்றுமே செய்ததில்லை' என்று விமர்சித்துள்ளார். 

நிர்மலா சீதாராமன்

 மேலும், `முன்னர் மத்தியில் ஆட்சிசெய்தது காங்கிரஸ்தான். ஆனால், அவர்களுக்கு குஜராத்குறித்து எந்த சிந்தனையும் இருந்ததில்லை. நர்மதா நதிக்கு அவர்கள் எதையும் செய்ததில்லை. நர்மதாவுக்கான வளர்ச்சித் திட்டங்கள், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதுதான் நடந்தன. மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் ஆட்சியில் இருந்தபோதுதான் குஜராத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன' என்று தெரிவித்துள்ளார்.