இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில் சுற்றலாம்!

ஏர் ஆசியா விமான நிறுவனம் 'பிக் சேல் ஸ்கீம்' என்ற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அறிவித்துள்ளது. 


ஏர் ஆசியா நிறுவனம், 99 ரூபாய் அடிப்படைக் கட்டணத்தில் சாமானியர்களும் விமான பயண ஆசையை நிறைவேற்றும் வண்ணம் புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 'பிக் சேல் ஸ்கீம்' என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் 99 ரூபாய் அடிப்படைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதிக்கு இடையிலான நாள்களில் உங்களது பயண தேதியைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி இம்மாதம் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. 99 ரூபாய் அடிப்படைக் கட்டணமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விமான நிலைய வரி மற்றும் ஜி.எஸ்.டி சேர்த்து உங்களது பயணக் கட்டணத்தில் வசூலிக்கப்படும்.

 புவனேஷ்வரிலிருந்து கொல்கத்தாவுக்கு 507 ரூபாயும், ராஞ்சியிலிருந்து கொல்கத்தாவுக்கு 571 ரூபாயும், கொச்சியிலிருந்து பெங்களுரூவுக்கு 764 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நகரங்களுக்கான கட்டண விவரங்கள் ஏர் ஆசியா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பிறகு, எந்தக் காரணத்துக்காவும் பயணத்தொகை திரும்ப அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுகள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!