21-ம் நூற்றாண்டை இந்தியாவுக்கான ஆண்டாக மாற்ற வேண்டும்..! மோடி வேண்டுகோள்

21-ம் நூற்றாண்டை இந்தியாவினுடைய நூற்றாண்டாக மாற்றுவது நமது கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி, ஏ.எஸ்.இ.ஏ.என் நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார். மாநாட்டில் பங்கேற்ற அவர், பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் பிரதமர் மோடி, அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'மகாத்மா காந்தி, இந்தியாவை எந்த இடத்தில் விட்டுச் சென்றாரோ அந்த இடத்திலிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். யாருக்குத் தூய்மை தேவைப்படாமல் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழித்ததிலிருந்து விடுபட்டுள்ளன.

ஒருவேளை 21-ம் நூற்றாண்டு ஆசியாவுக்கான ஆண்டாக இருந்தால், அதை இந்தியாவுக்கான ஆண்டாக மாற்ற வேண்டியது நமது கடமை. அது முடியும். எல்லா விஷயங்களிலும் இந்தியாவை உலகத் தரத்தில் மாற்றுவது நமது இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வங்கிச் சேவை இல்லாமல் இருந்தது. ஜன் தன் யோஜனா மூலம் அதை மாற்றினேன். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தேவையில்லாத 1,200 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!