பாகுபலி ஸ்டைலில் யானைக்கு முத்தம் கொடுத்தவருக்கு நேர்ந்த கதி! #ShockingVideo

கேரளாவில், பாகுபலி ஸ்டைலில் யானை மீது ஏற முயன்ற இளைஞர், தற்பொது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை ஐசியு பிரிவில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

elephant
 

கேரளாவின் தொடுப்புழா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், தன் நண்பர்களுடன் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெர்மிஷேசரி காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு, மது அருந்தியுள்ளனர். மது போதையில் இளைஞருக்கு ஒரு விசித்திர ஆசை தோன்றியுள்ளது. அவர்கள் இருந்த பகுதியில் தனியாக சுற்றித் திரிந்த யானையின்மீது பாகுபலி ஸ்டைலில் ஏற ஆசைப்பட்டார். அந்தக் காட்சியை ஃபேஸ்புக் லைவில் பகிர நண்பர்கள் முடிவுசெய்தனர். அந்த இளைஞர், யானையின் அருகில் சென்று பழங்களைக் கொடுத்தார். பின்னர், அதன் தந்தத்தைப் பிடித்து ஏற முயற்சிசெய்தார். இளைஞர் யானையின் தந்தங்களைப் பிடித்து முத்தம் கொடுத்தபோது, ஆத்திரமடைந்த யானை, இளைஞரை அதிவேகமாகத் தூக்கி எரிந்தது. யானை தூக்கி வீசியதால் தலைக்குப்புற விழுந்த இளைஞரை, நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். இந்தக் காட்சி, ஃபேஸ்புக் லைவில் ஒடியுள்ளது. தற்போது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விலங்கு இனத்துக்கு நாம் தொந்தரவு கொடுக்காதவரை அவற்றால் நமக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது என்பதை இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் யானை தான் பாகுபலி!

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!