Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

” ’தூய்மை இந்தியா’ திட்டத்தால் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுகிறான்” : ஐ.நா சாடல்

” பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது” என ஐ.நா சபை சாடியுள்ளது.

மோடி

பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், 'தூய்மை இந்தியா'. இத்திட்டம் அறிமுகமாகி சுமார் மூன்றாண்டுகள் நிறைவடைந்தபோதும் இந்தியாவின் தூய்மை மேம்படவே இல்லை என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இத்திட்டம்குறித்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நிலைதான் உருவாகியுள்ளது. பிரதமர் அறிமுகப்படுத்திய இத்திட்டம்மூலம் நாட்டின் தூய்மை மேம்படவே இல்லை;  மோசம் அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் முழுதாக நிறைவேற இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், இந்தியாவின் தூய்மை முன்னேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 

கழிவறைகள் பராமரிப்புகூட முறையாக இன்னும் இந்தியாவில் நிறைவேற்றவில்லை. மேலும், இந்தப் பணிகளுக்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களையே அரசு பயன்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது” என்று ஐ.நா சபை கடுமையாகச் சாடியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement