தாவூத் இப்ராஹிம் சொத்துகள் ரூ.11.58 கோடிக்கு ஏலம்!

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமாக தெற்கு மும்பையில் 3 இடங்களில் இருந்த சொத்துகள் ரூ.11.58 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

தாவூத் இப்ராஹிம்


இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம், தற்போது வெளிநாட்டில் பதுங்கி வாழ்கிறார். தெற்கு மும்பையில் இவருக்குச் சொந்தமான கட்டடங்கள் 3 இடங்களில் இருந்தன. அவற்றை ஏலத்தில் விட நிதி அமைச்சகம் முடிவு செய்திருந்தது. அதன்படி, ராவ்னக் அஃப்ராஸ் (டெல்லி ஸைக்கா) ஹோட்டல், ஷம்னம் கெஸ்ட் ஹவுஸ், தாமர்வாலா கட்டடத்தில் உள்ள தாவூதுக்குச் சொந்தமான 6 அறைகள் ஏலத்தில் விடப்பட்டன.

ராவ்னக் அஃப்ராஸ் ரூ.4.53 கோடிக்கும், ஷம்னம் கெஸ்ட் ஹவுஸ் ரூ.3.52 கோடிக்கும், தாமர்வாலாவில் உள்ள ஆறு அறைகள் ரூ.3.53 கோடிக்கும், என மொத்தம் ரூ.11.58 கோடிக்குச் சொத்துகள் ஏலம் போயின. சைஃபீ பர்கானி அப்லிப்மென்ட் அறக்கட்டளை இந்தச் சொத்துகளை ஏலத்தில் எடுத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!