வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (16/11/2017)

கடைசி தொடர்பு:19:45 (16/11/2017)

சௌமியமூர்த்தி தொண்டைமான் பெயர் நீக்கப்பட்ட விவகாரம்: ஸ்டாலின் கடிதத்துக்கு சுஷ்மா பதில்!

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்


இலங்கையில் மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சௌமியமூர்த்தி தொண்டைமானின் பெயர் இலங்கையில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டிருந்தது. சமீபத்தில் அரசு நிறுவனங்களிலிருந்து அவருடைய பெயரை இலங்கை அரசு நீக்கியதாகத் தகவல் வெளியானது. அந்தப் பெயர் மீண்டும் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார்.