வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (16/11/2017)

கடைசி தொடர்பு:20:35 (16/11/2017)

'கொலவெறி' பாடல் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவு... ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி!

உலக அளவில் பிரபலமடைந்த 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி பாடல் வெற்றிக்குக் காரணமானவர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷ் அனிருத்


நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து அவருடைய மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் '3'. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் உலக அளவில் மெகாஹிட் அடித்தது. நடிகர் தனுஷ் இந்தப்பாடலை எழுதி, அவரே பாடியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். அதுதான் அனிருத்தின் முதல் படம். '3' படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் யூ ட்யூப் தளத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற சாதனையையும் படைத்தது. இதன்மூலம் நடிகர் தனுஷுக்கு இந்தி, ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தன. அனிருத்தும் பிரபலமடைந்தார்.

இந்தப் பாடல் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி நடிகர் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், “கொல வெறி டி பாடல் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இசையமைப்பாளராக அனிருத்துக்கும் இது ஆறாவது வருடம் ஆகும். வாழ்த்துகள் அனிருத்.! இந்தப் பாடல் இந்த அளவுக்கு ஹிட் ஆனது எப்படி என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் மிகப்பெரும் சந்தோஷத்தை இந்தப் பாடல் எங்களுக்குக் கொடுத்தது. அதற்காக உங்கள் அனைவருக்கும் மறுபடியும் ஒருமுறை நன்றி” என்று கூறியுள்ளார்.