யோகி ஆதித்யநாத்துடன் பில் கேட்ஸ் சந்திப்பு!

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 


உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ், தொழில்முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அவர்கள், இந்தியாவில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள்குறித்து விவாதித்தனர். மேலும், கடந்த இந்தியாவின் பொதுச் சுகாதாரம் என்ற அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம், கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசால் ரத்துசெய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்குபவர்களில் பில்கேட்ஸும் ஒருவர்.

இதுதொடர்பாக, ராஜ்நாத் சிங்கிடம் பில்கேட்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பில்கேட்ஸ் சென்று சந்தித்தார். யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!