குஜராத் தேர்தல்..! பா.ஜ.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு | Gujarat polls; BJP releases first list of candidates 

வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (17/11/2017)

கடைசி தொடர்பு:14:37 (17/11/2017)

குஜராத் தேர்தல்..! பா.ஜ.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான பா.ஜ.க-வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல், இன்று வெளியிடப்பட்டது. 

குஜராத் தேர்தல்


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், டிசம்பர் 9 மற்றும் 18-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியைப் பிடிக்க ஆளும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முனைப்புக்காட்டி வருகின்றன. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த ஊர் என்பதால், குஜராத் வெற்றியை பா.ஜ.க கௌரவப் பிரச்னையாகப் பார்க்கிறது. அதேசமயம், அங்கு பா.ஜ.க-வை தோற்கடிப்பதில் காங்கிரஸ் தீவிரம்காட்டிவருகிறது.

பா.ஜ.க., இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 70 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இப்போதைய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட், வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் நிதின் பட்டேல் மெஸான தொகுதியில் களம் இறங்குகிறார். 

தற்போது எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ-க்களான ராகவ்ஜி பட்டேல், தர்மேந்திரசிங் ஜடேஜா, சி.கே.ராவுல்ஜி, மான்சிங் சௌகான், ராம்சிங் பார்மர் உள்ளிட்டோர் பா.ஜ.க-வில் இணைந்தனர். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.