மைனஸ் 5 டிகிரி குளிர்! - பனிப்போர்வைக்குள் காஷ்மீர்

உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. 

snowfall

பத்ரிநாத்

பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகளில் போர்வைபோல பனி போர்த்தியுள்ளது.

 

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 15-ம் தேதி, இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நிகழ்ந்தது. தற்போது படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதனால் காஷ்மீர், உத்தரகாண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கார்கில்

கார்கில்

பத்ரிநாத்தில், மலைப்பகுதி அருகே உள்ள வீடுகளை பனி மூடியுள்ளது. எங்கும் வெள்ளை நிறமாகக் காட்சியளிக்கிறது. ரசிக்கும்படி இருந்தாலும், அங்குள்ள மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தாலும், பனிப்பொழிவை அனுபவிக்க சுற்றுலாவாசிகள் குவிகின்றனர். 

snowfall

 கார்கில் பகுதியில் மைனஸ் 5 டிகிரி செல்ஷியஸ் குளிர் நிலவுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!