ராகுல் காந்தியின் உடல்மொழி, கப்பார் சிங்கை ஒத்திருக்கிறது! பா.ஜ.க பதிலடி | Rahul Gandhi's body language resembles that of Gabbar Singh: Giriraj Singh

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (18/11/2017)

கடைசி தொடர்பு:15:40 (18/11/2017)

ராகுல் காந்தியின் உடல்மொழி, கப்பார் சிங்கை ஒத்திருக்கிறது! பா.ஜ.க பதிலடி

'காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் உடல் மொழி, கப்பார் சிங்கை ஒத்திருக்கிறது' என்று மத்திய சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார்.

ராகுல்


ஜி.எஸ்.டி-யை 'ஷோலே' திரைப்படத்தில் வரும் வழிப்பறி கொள்ளைக்காரனான கப்பார் சிங்குடன் ஒப்பிட்டு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துவருகிறார். குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது இதைக் குறிப்பிட்டு, பா.ஜ.க-வை கடுமையாகத் தாக்கினார் ராகுல்.
ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடிகொடுத்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரிராஜ் சிங், “ஜி.எஸ்.டி பற்றி சிலர் அழுது புலம்பிவருகிறார்கள். இளவரசர் ராகுல், அதை கப்பார் சிங் வரி என்று வர்ணிக்கிறார். இது கப்பார் சிங் வரி அல்ல. ராகுல் தவறு செய்கிறார். அவருடைய பேச்சுதான் கப்பார் சிங்கைப்போல இருக்கிறது. அவருடைய உடல் மொழியும் கப்பார் சிங்கை ஒத்திருக்கிறது. காங்கிரஸ் ஜி.எஸ்.டி-யை எதிர்க்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் ஜி.எஸ்.டி-க்கு ஆதரவாக இருக்கிறார்கள். உள்ளே ஆதரவு, வெளியே எதிர்ப்பு என்று காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது” என்றார்.