மூடிஸ் ஏஜென்ஸிக்குப் பதிலாக கிரிக்கெட் வீரர் டாம் மூடியை காய்ச்சிய நெட்டிசன்கள்! | Cricketer Tom Moody trolled in Social Media

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/11/2017)

கடைசி தொடர்பு:17:45 (20/11/2017)

மூடிஸ் ஏஜென்ஸிக்குப் பதிலாக கிரிக்கெட் வீரர் டாம் மூடியை காய்ச்சிய நெட்டிசன்கள்!

பிழையாகப் புரிந்துகொண்டதால், மூடிஸ் ஏஜென்ஸிக்குப் பதிலாக கிரிக்கெட் வீரர் டாம் மூடியை நெட்டிசன்கள் காய்ச்சி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டாம் மூடி

 

அமெரிக்காவைச் சேர்ந்த தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் ஏஜென்ஸீஸ், இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங்கை சமீபத்தில் உயர்த்தியது. இதைத் தங்களின் சாதனையாக பா.ஜ.க-வினர் கூறினார்கள். எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்தன. ஆனால், இந்த அறிவிப்புக்குப் பிறகு, மூடிஸ் ஏஜென்ஸிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடிக்கும் வித்தியாசம் தெரியாமல் அவரை, சமூக வலைதளங்களில் சிலர் வறுத்து எடுத்துள்ளனர். குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள், டாம் மூடியின் ட்விட்டர் பக்கத்துக்குச் சென்று அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். “சிலர், கேரளாவுக்கு வந்து பார்..” என்றும் அறைகூவல் விடுத்துள்ளனர். பின்னர்தான் அவர் மூடிஸ் இல்லை; கிரிக்கெட் வீரர் டாம் மூடி என்ற விவரம் தெரியவந்துள்ளது. மூடிஸ் என்பது தர நிர்ணய நிறுவனம் என்பதும் அவர்களுக்கு உரைத்துள்ளது. அதன்பிறகு பின்வாங்கியுள்ளனர்.

சம்பந்தமில்லாமல் தனக்குத் திட்டு விழுவதைப் பார்த்து, மூடி திகைத்துள்ளார். வசைமாரிப் பொழிவது நின்றபிறகுதான் நிம்மதி அடைந்துள்ளார். இந்நிலையில், “நான் மூடிஸ் ரேட்டிங் ஏஜென்ஸியில் வேலைபார்க்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களுக்கு நன்றி” என்று அவர் கிண்டலாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஆனால், “இதை நாங்கள் செய்யவில்லை. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களே கம்யூனிஸ்டுகள் பேரில் ட்விட்டரில் போலியாக கணக்குத் தொடங்கி இதை அரங்கேற்றியுள்ளனர்” என்று மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.