சர்ச்சை வீடியோவில் இருந்தது நித்யானந்தாவா? - தடயவியல் ஆய்வகம் ரிப்போர்ட்

சாமியார் நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ, கடந்த 2010-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

nithyananda
 

வீடியோ ஒளிப்பரப்பானதைத் தொடர்ந்து, நித்யானந்தாவுக்குப் பெருமளவு அவப்பெயரை சம்பாதித்துக்கொடுத்தது. இதனிடையே, இது உண்மையான வீடியோ அல்ல என்றும், நவீன தொழில்நுட்பம் மூலம் சித்திரிக்கப்பட்டது என்றும்  நித்யானந்தா சார்பில் நித்யானந்த தியான பீட நிர்வாகி, சென்னை காவல் துறையில் புகாரளித்தார்.

 அந்தப் புகாரின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி காவல்துறை சிலர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், 2010-ம் ஆண்டு வெளியான சர்ச்சை வீடியோவில் இருப்பது நித்யானந்தாதான் என்று டெல்லி தடயவியல் ஆய்வகம் (Delhi Forensic lab) உறுதிப்படுத்தியுள்ளது. நித்யானந்தா தரப்பில் கூறுவது போல அந்த வீடியோ சித்திரிக்கப்பட்டது இல்லை. அதில் இருப்பது நித்யானந்தா தான் என்று தடயவியல் ஆய்வக ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!