வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (23/11/2017)

கடைசி தொடர்பு:15:40 (23/11/2017)

சகாரிகா காட்கே உடன் கைகோத்தார் ஜாகீர் கான்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுக்கு, பாலிவுட் நடிகை சகாரிகா காட்கே உடன் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

ஜாகிர்- சகாரியா

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சக்தே இந்தியா’ திரைப்படத்தில், புகழ்பெற்ற ‘ப்ரீத்தி சபர்வால்’ ஆக நடித்துப் பெயர்பெற்றவர், சகாரிகா காட்கே. சகாரிகாவும் ஜாகீர் கானும் நீண்ட நாள்களாகக் காதலித்துவந்தனர். இவர்களின் காதலும், பாலிவுட்டுக்கும் கிரிக்கெட் உலகுக்கும் புதிதல்ல. இதற்கு முன்னர், யுவராஜ் சிங் திருமணத்தில் இருவரும் ஜோடியாகக் கலந்துகொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.  அதன் பின்னர், பாலிவுட்- கிரிக்கெட் சமூகத்தில் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம் வந்த ஜாகீர்- சகாரியா ஜோடி, கடந்த ஏப்ரல் மாதம் நிச்சியதார்த்தம் நடந்த பின்னர், தங்கள் காதலை உலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஜாகீர் கான்- சகாரியா காட்கே திருமணம், எளிமையான பதிவுத்திருமணமாக நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு, வரும் நவம்பர் 27-ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் பேலஸில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.