மும்பையை புரட்டிப்போட்ட நாள் இன்று! #Mumbai26/11

மும்பையில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிரைப் பறித்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்து இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் ஆகிறது.  ’மும்பை 26/11’ என்று இந்த கோரத் தாக்குதலை குறிப்பிடுவது வழக்கம். 

mumbai attack
 

2008 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் இதே நாளில் 10 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் மும்பைக்குள் நுழைந்தனர். மும்பை நகரின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். சுமார் நான்கு நாள்கள் தொடர் தாக்குதல் நடத்தினர். தாஜ் ஹோட்டலை குறிவைத்து தாக்கினர். மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் 'சி.எஸ்.டி' ரயில் நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை.

இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள், காவல்துறை அதிகாரிகள், வெளிநாட்டவர்கள் என 164 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் தாக்குதலின் கோர நினைவுகளை சுமந்து நிற்கும் மும்பையில் இன்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த 164 பேருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக மும்பை போலீஸ் நினைவு விழா ஏற்பாடு செய்துள்ளது.

அப்பாவி மக்களின் உயிரை பறித்த இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மூளையாக இயங்கிய ஹபீஸ் சையத் என்னும் தீவிரவாதியை அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் வீட்டுச்சிறையில் இருந்து விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!