அரசியலா...நோ..! ரகுராம் ராஜன் பளீச்

'நான் அரசியலில் இறங்குவதில் மனைவிக்கு விருப்பம் இல்லை' என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

ராஜன்


இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர், ரகுராம் ராஜன். பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்காவில் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ரகுராம் ராஜனுக்கு, ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி., பதவி தருவதாகக் கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இது சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளித்து ரகுராம் ராஜன் பேசுகையில், “எனக்கு மாநிலங்களவை எம்.பி., பதவி தருவதாக அழைத்தார்களா என்பது பற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நான் பேராசிரியராக இருப்பதில்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் தொழிலைத்தான் விரும்புகிறேன். அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு என் பதில் இல்லை என்பதுதான். அரசியல் நமக்குத் தேவையில்லை என என் மனைவி தெளிவாகச் சொல்லிவிட்டார்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நீண்டகால அடிப்படையில் பலன் தரும். ஆனால், அதில் சில குறைபாடுகளை நீக்கவேண்டி இருக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக நான் இருந்தபோது, மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் சில விஷயங்களில் முரண்பாடு ஏற்பட்டது உண்மை. அது, வழக்கமான ஒன்றுதான்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!