வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (27/11/2017)

கடைசி தொடர்பு:13:00 (27/11/2017)

பெரும்பான்மை தேசியவாதம் பொருளாதாரத்தைப் பாதிக்கும்! - ரகுராம் ராஜன்

பெரும்பான்மை தேசியவாதம் பொருளாதாரத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டது என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 


நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், 'பெரும்பான்மை தேசியவாதம் பொருளாதாரத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டது. ஏனென்றால், அது பிரிவினையை உருவாக்கும். பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் என்று மற்றவர்களின் உணர்வுகளை புறக்கணிக்கப்படுகின்றன. இது உலகம் முழுவதுமுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவுக்கும் பொருந்தும். வேலைவாய்ப்பின்மை என்பது இந்தச் சூழலில் நாம் தீர்க்கவேண்டிய முக்கியமான பொருளாதாரத் தடையாகும்.

பெரும்பான்மை மக்களின் எண்ணம் என்று வரலாற்று ரீதியாக சிறுபான்மை மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை புறக்கணிக்க முடியாது. தேசியவாதம் என்பது நாட்டுப்பற்று அல்ல. அது பிரிவினைவாதமாகும். இன்னும் சொல்லப்போனால் அது மிகவும் ஆபத்தானது' என்று தெரிவித்துள்ளார்.