மனிதனின் வயிற்றிலிருந்து 5 கிலோ இரும்புப் பொருள்கள் அகற்றம்! மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி

மத்தியப் பிரதேசத்தில் 32 வயது நபரின் வயிற்றிலிருந்து 263 நாணயங்கள், ஊசிகள் உள்ளிட்ட இரும்பு பொருள்கள் அறுவைச் சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. 


மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது மக்சூத்தவருக்கு வயது 32. அவர் வயிற்று வலியின் காரணமாக சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்போது வயிற்றில் இரும்புப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு, முகம்மதுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அவர்கள், வயிற்றிலிருந்து 12 பிளேடு, 4 பெரிய அளவுள்ள ஊசி, செயின், 263 நாணயங்கள், கண்ணாடித் துண்டுகள் ஆகிய பொருள்கள் எடுக்கப்பட்டன.

அந்தப் பொருள்களின் எடை 5 கிலோ இருந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள், 'இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், ஆறு மாதம் மற்றொரு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார். அவர், மனநிலை நல்ல நிலையில் இல்லை. யாருக்கும் தெரியாமல் அவர், இந்தப் பொருள்களை முழுங்குகிறார். தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்' என்று தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!