வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (29/11/2017)

கடைசி தொடர்பு:11:09 (29/11/2017)

உச்சத்தில் சந்தை: வீழ்ச்சியில் ஆக்சிஸ் வங்கிப் பங்குகள்

இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தில் தொடங்கியபோதும், சந்தையில் கடும் சரிவைச் சந்தித்த பங்கு நிறுவனமாக உள்ளது, ஆக்சிஸ் வங்கி.

ஆக்சிஸ் வங்கி

உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தையும் கடந்து, இன்றைய இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் தொடங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 25.80 புள்ளிகள் உயர்ந்து, 33,644 புள்ளிகளாகத் தொடங்கியுள்ளது. அதே வேளை, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.85 புள்ளிகள் உயர்ந்து, 10,376 புள்ளிகளாக உள்ளது.

சர்வதேச சந்தை மதிப்பீட்டில், ஆசிய சந்தை உச்சத்தில் நீடிக்கும் வேளையில், இந்திய வர்த்தகச் சூழலில் மிகப்பெரும் சரிவைச் சந்தித்த நிறுவனமாக ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் உள்ளன. இன்றைய சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில், ஆக்சிஸ் வங்கியில் பங்கு விலை 561.50 ரூபாயகத் தொடங்கியது. ஆனால், வர்த்தகப் போக்கில் ஒரு பங்கின் விலை 1.29% சரிந்து தற்போது 554.95 ரூபாயாக விற்பனை நிலவரம் நீடிக்கிறது.