வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (29/11/2017)

கடைசி தொடர்பு:08:03 (30/11/2017)

கேரள டி.ஜி.பி. மீது வழக்குப் பதிவு செய்ய பினராயி விஜயன் உத்தரவு!

பணியில் இருக்கும்போது சுயசரிதை எழுதிய கேரள மாநில டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸ்மீது கிரிமினல் வழக்குத் தொடர முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரள லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றியவர் ஜேக்கப் தாமஸ். இவர் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளார். கடந்தசில மாதங்களுக்கு முன் ஜேக்கப் தாமஸ் நீண்ட விடுப்பில் சென்றார். அதன்பின் அவர், 'சுறாக்களுடன் நீந்தும் போது' என்ற தலைப்பில் தனது பணிக்கால அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜேக்கப் தாமஸ் தனது புத்தகத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான பல கருத்துகளைக் கூறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க தலைமைச் செயலாளருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். விசாரணையில் ஜேக்கப் தாமஸின் சுயசரிதை புத்தகத்தில் அரசுக்கெதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஜேக்கப் தாமஸ்மீது கிரிமினல் வழக்குத் தொடரவும், துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசின் அனுமதியின்றி அரசு நிர்வாகம்குறித்த பல்வேறு தகவல்களை அந்தப் புத்தகத்தில் ஜேக்கப் கூறியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க