`நான் முன்னுதாரணமாகப் பார்த்த நபரை சந்திக்கப்போறேன்..!' - மோடியின் சந்திப்பு குறித்து நெகிழ்ந்த உலக அழகி

உலக அழகி மனுஷி சில்லர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தன் குடும்பத்தினருடன் இன்று சந்தித்தார்.

குடும்பத்துடன் பிரதமரைச் சந்தித்த மனுஷி சில்லர்

சீனாவின் சான்யா சிட்டியில், நவம்பர் 18-ம் தேதி உலக அழகிப் போட்டி நடைபெற்றது. அதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ நாடுகளின் அழகிகளைத் தோற்கடித்து பட்டம் வென்றார். இவர், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமாகி வருகிறார். 

இந்நிலையில் இன்று அவர் தன் குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். பிரதமருடனான சந்திப்புக்கு முன்னர் மனுஷி, `மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது குறித்து உற்சாகத்துடன் இருக்கிறேன். நான் எப்போதும் முன்னுதாரணமாகப் பார்த்த நபரை நேரில் சந்திப்பதென்பது எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும்' என்று கூறியிருந்தார். உலக அழகி பட்டத்தை வென்றபோது, மோடி, மனுஷியை ட்விட்டர் மூலம் வாழ்த்தியிருந்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!