`பிரதமர் மோடி உண்மையான இந்து அல்ல..!' - கபில்சிபல் ஆவேசம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல், `பிரதமர் நரேந்திர மோடி ஓர் உண்மையான இந்து அல்ல' என்று கறாராக விமர்சனம் செய்துள்ளார்.

Kapil Sibal

நேற்று காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் இருக்கும் சோம்நாத் கோயிலுக்குச் சென்றார். அப்போது அவர் இந்து அல்லாதோருக்கான வருகைப் பதிவில் கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில், `இந்து', `இந்து அல்லதோர்' என்றெல்லாம் வருகைப் பதிவு சோம்நாத் கோயிலில் இல்லை. அங்கிருந்தது ஒரேயொரு வருகைப் பதிவுதான் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டது. இதைத் தவிர இணையத்தில் உலவும் மற்ற புகைப்படங்கள் போலியானவை என்று பதிலடி கொடுத்தது காங்கிரஸ். 

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில்தான் கபில்சிபல், `பிரதமர் நரேந்திர மோடி உண்மையான இந்து அல்ல. பா.ஜ.க-வினர் இந்து மதத்தை மறந்துவிட்டனர். அவர்கள் இந்துத்துவாவைப் பின்பற்றுகின்றனர். குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வினர் பணமதிப்பிழப்பு பற்றியோ ஜி.எஸ்.டி பற்றியோ பேசவில்லை. அது செயல்படாது என்று அவர்களுக்குத் தெரியும்' என்று கூறி பரபரக்க வைத்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!