இந்தியா வருகிறார் ஒபாமா: பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இன்று இந்தியா வரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தனது அறக்கட்டளை தொடர்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் பங்கேற்று வருகிறார். இந்த வகையில் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் ஒபாமா. இந்நிலையில், இன்று இந்தியா வரும் ஒபாமா, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடியும் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் தயாராகி உள்ளார்.

பிரதமர் மோடி உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டெல்லியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார். பின்னர் தனது அறக்கட்டளையின் டவுன் ஹால் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார் ஒபாமா. பின்னர் இந்தியா முழுவதுமிருந்து வந்துள்ள இளைஞர்கள் பிரதிநிதிகளுடன் ஒபாமா கலந்துரையாட உள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒபாமா முதன்முறையாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். இதனால், மோடியின் சார்பாக சிறப்பான வரவேற்பு காத்துக்கொண்டிருக்கிறது. இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக பிரான்ஸ் செல்கிறார் ஒபாமா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!